browser icon
You are using an insecure version of your web browser. Please update your browser!
Using an outdated browser makes your computer unsafe. For a safer, faster, more enjoyable user experience, please update your browser today or try a newer browser.

Visual Biography of Mahatma Gandhi Quotes

1869-1893
I used to be very shy
And avoided all company

எனக்கு ஸங்கோஜம் மிகுதியாக இருந்தது;
நான் ஒருவருடனும் சேராதிருந்தேன்

Boyhood Days : 1869-1888
“He truly wins in life
Who returns good for evil
And for good requites ten fold good”.

1894-1912
I had gone to South Africa for gaining
My livelihood but I found
My self in search of god and striving
For self realization

நான் பிழைப்பிற்காகத் தென் ஆப்பிரிக்காவுக்குச் சென்றேன் ; ஆனால்
கடவுளையும் ஆத்மஞானத்தையும் தேடும் முயற்சியில் ஈடுபட்டுவிட்டேன்.

1912-1914
I saw that South Africa was no country for a self respecting
Indian and my mind became more and more occupied with the
Question as to how this state of things might be improved

சுயமரியாதையுடைய இந்தியனுக்குத் தென் ஆப்பிரிக்கா ஏற்றதல்ல என்பதை நான் கண்டேன்; இந்த நிலைமையை எப்படி சீர்திருத்துவது என்பதைப் பற்றியே என் மனம் அதிகமாகச் சிந்திக்கலாயிற்று.

Three moderns have left a deep impress on my life, and captivated me:

1. Raychandbhai by his living contact;
2. Tolstoy by his book, ‘The kingdom of God is within you;
3. Ruskin by his ‘UNTO THIS LAST’.

1912-1914
THREE WISE MONKEYS
See no Evil
Hear no Evil
Speak no Evil

மூன்று நீதிக் குரங்குகள்
தீயதைப் பார்க்காதே
தீயதைக் கேட்காதே
தீயதைப் பேசாதே

கற்களால் கட்டப்படும் ஆலயங்களை விட மனிதத் தேகங்களே உண்மையான ஆலயங்கள்

ONE OF OBJECTS OF A NEWSPAPER IS TO UNDERSTAND POPULAR FEELING, AND TO GIVE EXPRESSION TO IT; ANOTHER IS TO AROUSE AMONG THE PEOPLE CERTAIN DESIRABLE SENTIMENTS : AND THE THIRD IS FEARLESSLY TO EXPOSE POPULAR DEFECTS.

I DO NOT WANT MY HOUSE TO BE WALLED IN ALL SIDES AND MY WINDOWS TO BE STUFFED. I WANT THE CULTURES OF ALL LANDS TO BE BOLWN ABOUT MY HOUSE AS FREELY AS POSSIBLE BUT I REFUSE TO BE BLOWN OFF MY FEET BY ANY

1915-1922

  • SURELY SWARAJ THROUGH THE SPINNING WHEEL CAN BE
  • THE PROPOSITION OF ONLY ALUNATIC, BUT LUNATICS ARE
  • UNAWARE OF THEIR LUNACY, AND SO I REGARD MYSELF AS ONE

சர்க்கா மூலம் சுயராஜ்யத்தை அடைவது நிச்சயம் பைத்தியக்காரனுடைய யோசனைதான். ஆனால் பைத்தியக்காரர்கள் தங்கள் பைத்தியத்தை உணர்வதில்லை. ஆகையால், நானும் என்னை ஒரு பைத்தியக்காரன் என்றே நினைத்துக் கொள்கிறேன்.

I WANT WOULD SYMPATHY IN THIS BATTLE OF RIGHT AGAINST LIVING IT.
M.K.GANDHI.
வலிமை மிக்க ஆங்கிலேய ஆட்சியை எதிர்த்து நடக்கும் இவ்வுரிமைப் போராட்டத்திற்கு உலக மக்களின் இரக்கத்தை நான் வேண்டுகிறேன்.
எம்.கே.காந்தி.

1923-1931
IN MY OPINION, NON-CO-OPERATION, WITH EVIL IS AS MUCH A DUTY AS IS CO-OPERATION WITH GOOD.

நல்லவற்றோடு ஒத்துழைப்பது போலவே தீயவற்றோடு ஒத்துழையாதிருப்பதும் எல்லாருடைய கடமை என்பது என் கருத்து.

1931-1932
MY AMBITION IS NO LESS THAN TO CONVERT
THE BRITISH PEOPLE THROUGH NON VIOLENCE, AND THUS MAKE THEM SEE THE WRONG THEY HAVE DONE TO INDIA.

அகிம்சை மூலமாகவே பிரிட்டிஷ் மக்களின் மனம் மாற்றி அவர்கள் இந்தியாவிற்குச் செய்த தீமையை உணரும்படி செய்வதே என் ஆசை.

1933-1934
THINGS OF FUNDAMENTAL IMPORTANCE TO THE PEOPLE ARE NOT SECURED BY REASON ALONE, BUT HAVE TO BE PURCHASED WITH THEIR SUFFERING

மக்களுக்கு அடிப்படையான முக்கியத் தேவைகளை வாதத்தினால் பெற முடியாது. அவர்கள் துயரம் அனுபவித்தே பெற வேண்டும்.

GANDHIJIS REMARKS WRITTEN IN THE VISITOR’S BOOK OF SREE MEENAKSHI TEMPLE, MADURAI.

“I AM GLAD THAT THE DESIRE THAT I HAD ENTERTAINED FOR YEARS IN FULFILLED TO DAY”
Signed
M.K.GANDHI
3-2-‘46

1934-1937
I NEEDED THE SOLITUDE OF SEVAGRAM.
IT HAS BEEN MY EXPERIENCE THAT I CAN DRAW MY INSPIRATION ONLY FROM MY NATURAL SETTING – THE SURROUNDINGS IN WHICH I LIVE.

சேவாகிராமத்தின் தனிமை எனக்குத் தேவையாய் இருந்தது,
நான் வாழும் இயற்கைச் சூழ்நிலையிலிருந்து எனக்கு ஊக்கம் பிறக்கிறதென்பது என் அனுபவம்.

1937-1939
MY LIFE HAS BEEN AN OPEN BOOK. I HAVE NO SECRETS AND I ENCOURAGE NO SECRETS.

எனது வாழ்க்கை முழுவதும் திறந்த புத்தகமே. என்னிடம் ரகசியங்கள் ஒன்றுமில்லை. அவற்றை நான் ஆதரிப்பதும் இல்லை.

MY DEVOTION TO TRUTH HAS DRAWN ME INTO THE FIELD OF POLITICS AND I CAN SAY WITHOUT THE SLIGHTEST HESITATION AND YET IN ALL HUMILITY, THAT THOSE WHO SAY THAT RELIGION HAS NOTHING TO DO WITH POLITICS DO NOT KNOW WHAT RELIGION MEANS.

சத்தியத்தில் என்கிருந்த பற்றுதல் என்னை அரசியல் துறைக்கு இழுத்தது, மதத்திற்கும் அரசியலுக்கும் சிறிதும் சம்பந்தம் இல்லையென்று சொல்பவர்கள் மதம் இன்னதென்பதை அறியாதவர்கள் என்று நான் சற்றும் தயக்கமின்றி மிகவும் பணிவுடன் கூறுவேன்.

1939-1942
I AM A LEARNER MYSELF, I HAVE NO AXE TO GRIND AND WHEREVER I SEE A TRUTH, I TAKE IT UP AND TRY TO ACT UPTO IT.

நான் ஒரு மாணவன், என்னுடைய ஒரு வித சுயநலத்தையும் கருதவில்லை. எங்கெங்கு உண்மை புலப்படுகிறதோ, அங்கிருந்து அதை நான் கைப்பற்றி அதன்படி வாழ முயலுகிறேன்.

1942
OUR QUARREL IS NOT WITH THE BRITISH PEOPLE : WE FIGHT THEIR IMPERIALISM. THE PROPOSAL FOR THE WITHDRAWAL OF BRITISH POWER DID NOT COME OUT OF ANGER.

பிரிட்டிஷ் மக்களோடு நமக்குச் சண்டையில்லை, அவர்களுடைய ஏகாதிபத்தியத்தைச் சண்டையிடுகிறோம். பிரிட்டிஷ் அதிகாரத்தை வாபஸ் பெற வேண்டுமென்ற யோசனை கோபத்தினால் உண்டானதல்ல.

1943-1944
WE WERE A COUPLE OUTSIDE THE ORDINARY. OURS WAS A LIFE OF CONTENTMENT, HAPPINESS AND PROGRESS.

நாங்கள் அசாதாரணமான தம்பதிகள், எங்களுடைய வாழ்க்கை திருப்தி, சந்தோஷம், முன்னேற்றம் ஆகியவற்றைக் கொண்டது.

1944-1946
I SPARE NEITHER FRIEND NOR FOE WHEN IT IS A QUESTION OF DEPARTING FROM THE CODE HONOUR.

கௌரவமான வழியிலிருந்து யார் விலகினாலும் நண்பனோ, விரோதியோ நான் மன்னிக்க மாட்டேன்.

1945-1947
LET IT BE THE PRIVILEGE OF INDIA TO TURN A NEW LEAF AND SET A LESSON TO THE WORLD

ஒரு புதிய வாழ்க்கையைத் தொடங்கி உலகத்திற்கு உதாரணமாக விளங்க வேண்டியது இந்தியாவின் தனி உரிமையாகும்.

1946-1948
THE WORK I AM NOW “ ENGAGED IN HERE MAY BE MY LAST ACT
MY AHIMSA IS BEING TRIED HERE THROUGH AND THROUGH AS IT WAS NEVER BEFORE.

நான் இப்பொழுது இங்கு செய்யும் வேலை எனது கடைசிக் காரியமாக இருக்கலாம். முன்பு எப்பொழுதும் இல்லாதபடி இப்பொழுது இங்கு எனது அஹிம்சை மிகவும் சோதிக்கப்படுகிறது.

1948
DEATH IS TRUE FRIEND
IT IS ONLY OUR IGNORANCE
THAT CAUSES US GRIEF

January – 29

மரணம் ஒரு உண்மையான நண்பன்
நம் அறியாமைதான் அதைக்குறித்து
நம்மை வருந்தும்படி செய்கிறது.

I DO NOT KNOW WHAT TO TELL YOU AND HOW TO SAY IT.
THIS IS A TERRIBLE BLOW, NOT ONLY TO ME BUT TO THE MILLIONS AND
MILLIONS IN THIS COUNTRY. -JAWAHARLAL NEHRU
1948, JAN.30

இந்துஸ்தான் ஸ்டாண்டர்ட்
இந்திய தேசிய நோக்கம் கொண்ட நிறுவனம் கல்கத்தா 31 ஜனவரி 1948

காந்தியடிகள் சுட்டுக் கொல்லப்பட்டார். (30-1-1948)
இது உலக வரலாற்றில் வெள்ளிக்கிழமையன்று சித்திரவதை செய்யப்பட்ட இரண்டாவது கொலையாகும்.
ஆயிரத்து தொள்ளாயிரத்து பதினைந்து ஆண்டுகளுக்கு முன் ஒரு வெள்ளிக்கிழமையில் தான் இயேசு பெருமான் சிலுவையில் அறைந்து கொல்லப்பட்டார். பரமபிதாவே! எங்களை மன்னிப்பீராக!

HINDUSTHAN STANDART AN INDEPENDENT ORGAN OF INDIAN NATIONALISM
CALCUTTA THE 31ST JANUARY – 1948
GANDHIJI HAS BEEN KILLED …..
THIS SECOND CRUCIFIXION IN THE HISTORY OF THE WORLD
HAS BEEN ENACTED ON A FRIDAY – THE SAME DAY JESUS WAS DONE TO
DEATH, ONE THOUSAND NINE HUNDRED AND FIFTENN YEARS AGO.

FATHER, FORGIVE US!

“சுடப்பட்டு நான் மரணம் அடைய நேர்ந்தால் முணுமுணுக்காமல் குண்டடியை ஏற்று இறைவன் திருநாமத்தை உச்சரித்துக் கொண்டே உயிர் நீக்க வேண்டும். அப்பொழுதுதான் என்னுடைய குறிக்கோளுக்கேற்ப வாழ்ந்தவனாவேன்.”

30TH JANUARY 1948

GANDHIJI HAS BEEN KILLED
CLOTH WORN BY GANDHIJI ON HIS LAST DAY BLOOD STAINED (ORIGINAL)

GENERATION TO COME IT MAY BE WILL SCARCE BELIEVE THAT SUCH A ONE AS THIS EVER IN FLESH AND BLOOD WALKED UPON THE EARTH.

-ALBERT EINSTEIN.

A STATUE EXPLAINED AS

“A THIN ELONGATED FORM IS SUSPENDED IN SPACE, WHICH SYMBOLISED ETERNITY,
A HAND REACHES TO THE SKY AND A HEAVY FOOT TIES IT TO THE EARTH,
BETWEEN THESE OPPOSING FORCES HANGS A BODY WHICH IS NOT TORTURED
BY THIS CONFLICT BUT WHICH IS CALM AND IN REPOSE.

“ALTHOUGH THERE IS ONLY ONE ARM AND HAND, AND ONE LEG AND FOOT, BOTH THESE LIMBS CAST SHADOWS ON THE WALL AGAINEST WHICH THE FIGURE IS HUNG, AND THESE SHADOWS TAKE ON A REALITY OF THEIR OWN AND REPLACE THE MISSIONG LIMBS. SO, IN THE COUNTER PLAY OF THE LIMBS AND THEIR SHADOWS LIES THE METAPHORICAL COUNTER PLAY OF LIGHT AND DARKNESS OF THE REAL AND THE UNREAL AND THE CONFLICT OF THESE FORCES IS HELD IN EQUALIBRIUM IN THE IMMORTAL CALM OF THE DEAD GANDHI.”

FINALLY, IF THE HAND SEEMS RAISED IN BENEDICTION, THEN IT IS A BENEDICTION. IF IT SEEMS RAISED IN PROTEST.
THEN LET IT BE A LASTING PROTEST AGAINST.
-WILLIAM DE DANGERS HENDRIK.

REPLICA OF THE CARVING IN WOOD ENTITLED TWENTIETH CENTURY PROPHET BY THE SOUTH AFRICAN DUTCH ARTIST WILLIAM DE DANDERS HENDRIK WITH THE NOTE EXPLANING THE SIGNIFICANCE OF THE FIGURE.

இருபதாம் நூற்றாண்டின் தீர்க்கதரிசி

“ஒரு மெலிந்த நீண்ட உரு வெற்றிடத்தில் நிலை கொள்ளச் செய்யப்பட்டுள்ளது. வெற்றிடம் அழியாத் தன்மையின் உருவகப் பொருளாக அமைகின்றது. உருவின் ஒரு கரம் விண்ணை எட்டுகின்றது, அதன் கனத்த ஒரு திருவடியோ பூமியுடன் பிணைக்கின்றது. மாறுபட்ட இச்சக்திகளுக்கிடையே தொங்கிய நிலையில் காணப்படுகின்ற உடல், சக்திகளின் முரண்பாட்டில் வதைப்படாது. அமைதியிலும், அசைவற்ற நிலையிலும் ஆழ்ந்துள்ளது. ஒரே புஜம், ஒரே கை, ஒரே கால், ஒரே பாதம் இவையே காணக்கிடப்பினும் இவ்வுறுப்புகள் உருவம் சாய்ந்திருக்கும் சுவரின் மீது நிழல்களை விளைக்கின்றன. இந்நிழல்கள் தமக்கென்றே ஒரு நிஜத் தன்மை பெற்று காணாத உறுப்புகளுக்குப் பிரதியாக அமைகின்றன. ஆம் உறுப்புகளும், அவற்றின் நிழல்களும் இழையோடி விளையாடுவதிலே, உள்ளதும் இல்லாததுமாகிய ஒளியும் இருளும் பின்னி விளையாடுவது உட்பொருளாய்க் காணக் கிடக்கின்றது. இச் சக்திகளின் பிணக்கு அமரர் காந்தியின் அளவிலா அமைதியில் சமநிலைப்படுத்தப்பட்டுள்ளது.”

முடிவாக ஒன்று, உயர்த்தப்பட்டிருக்கும் கரம் வாழ்த்துவதாகத் தோன்றினால் அதனை வாழ்த்தி வாழ்வளிக்கும் கரமாகவே கொள்க. அன்றி, அது எதிர்ப்பை தெரிவிக்க தூக்கப்பட்டதாகத் தோன்றினால், ஓய்விலாது அநீதியைச் சாடும் எதிர்ப்புக்கரமாகவே அதனைக் கொள்க.
-வில்லியம் டே டாண்டர்ஸ் ஹென்ரிக்

தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த டச்சுக் கலைஞர் வில்லியம் டீ டாண்டர்ஸ் ஹென்ரிக் மரத்தில் செதுக்கி உருவாக்கிய 20ஆம் நூற்றாண்டின் தீர்க்கதரிசி என்பதின் பிரதி, இதில் பொதிந்திருக்கும் கருத்துக்களின் விளக்கவுரை கலைஞரால் தரப்பட்டுள்ளது.

THE CENTRAL FACT OF COTTAGE INDUSTRIES TO MAKE EVERY VILLAGE SELF SUPPORTING FOR ITS FOOD AND CLOTHING
குடிசைத் தொழிலின் நடுநாயகமான உண்மை யாதெனின் ஒவ்வொரு கிராமமும் தனக்குத் தேவையான உணவு உடைகளைத் தயாரித்துக் கொண்டு தன்னிறைவு அடைவதே.

IF I HAVE TO BE REBORN, I SHOULD BE BORN AN UNTOUCHABLE, SO THAT I MAY SHARE THE SORROWS, SUFFERINGS AND AFFRONTS LEVELLED AT THEM. IN ORDER THAT I MAY ENDEAVOUR TO FREE MYSELF AND THEM FROM THAT MISERABLE CONDITION.

நான் மறுபடியும் பிறப்பதானால் அவர்களுடைய கஷ்ட நஷ்டங்களிலும் அவமானங்களிலும் பங்கு கொண்டு என்னுடையதும் அவர்களுடையதுமான கேவல நிலைமையிலிருந்து விடுதலை அடைவதற்காக ஹரிஜனங்களில் ஒருவனாகப் பிறப்பேனாக.

BY EDUCATION I MEAN AN ALL ROUND DRAWING OUT OF THE BEST IN CHILD AND MAN BODY, MIND AND SPIRIT.
படிப்பின் என்னுடைய அர்த்தம் என்னவென்றால் பாலர்களிடமிருந்தும், வயோதிகர்களிடமிருந்தும் சரீர, மனது, ஆத்மீக அதிசிரேஷ்டமான குணங்களை எடுத்துக்காட்டுவதே.

THEY TRAMPED INDIA
இவ்வடிகள் இந்தியா முழுவதிலும் நடந்து சென்றவைகள்

THE HANDS THAT BLESSED MILLIONS
லட்சக்கணக்கான மக்களை ஆசீர்வதித்த கைகள்

THE CREATIVE GENIUS
ஆக்க சக்தியுள்ள மேதை

TO ME – THE FEMALE SEX – NOT THE WEAKER SEX,
FOR IT IS THE NOBLER OF THE TWO,
IS EVEN TODAY, THE EMBODIMENT OF SACRIFICE,
SILENT SUFFERING, HUMILITY, FAITH AND KNOWLEDGE.

என் மனதில் பெண்மணிகள் இரு பாலரில் புனிதமானவராதலால் அபலைகளல்ல. இன்றும் பெண்ணினமானது தியாகம், தபஸ், வினயம், விஸ்வாஸம், நம்பிக்கை, ஞானம் இவற்றின் உருவமே.

THE WORLD IS WEARY OF HATE
WE SEE THE FATIGUE
OVER COMING THE WESTERN NATIONS
WE SEE THAT THIS SONG
OF HATE HAS NOT BENEFITED HUMANITY.
LET IT BE THE PRIVILEGE
OF INDIA TO TURN A NEW LEAF AND SET
A LESSON TO THE WORLD.

WELCOME YOU ALL
DURING YOUR VISIT TO MADURAI KINDLY VISIT OUR GANDHI MEMORIAL MUSEUM.